விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் சாஸ்தாவிநல்லூர் குடிநீர் அபிவிருத்தி மையம் மற்றும் விவசாய நலச்சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ் தலைமை தாங்கினார். படுக்கப்பத்து விவசாய நலச்சங்க தலைவர் சரவணன், சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன், போலையர்புரம் விவசாய நலச்சங்க தலைவர் டேவிட், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எட்வர்ட் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்து மணி வரவேற்றார்.
கூட்டத்தில், கன்னடியன் கால்வாய் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். மருதூர் மேலக்காலில் இருந்து கால்வாய், சடையனேரி, சுப்பராயபுரம், வைரவன்தருவை, புத்தன்தருவை நீர்வழிப்பாதையை சரிசெய்ய வேண்டும். வைரவன் தருவையில் நீர் வெளியேறும் பகுதியில் 3 அடியில் ஒரு சிறிய தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க பொருளாளர் ரூபேஷ்குமார், துணை செயலாளர்கள் அருள்ராஜ், ஜஸ்டின் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.