மஞ்சளுக்கு குவிண்டால் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கஸ்பாபேட்டையில், விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்


மஞ்சளுக்கு குவிண்டால் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கஸ்பாபேட்டையில், விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
x

மஞ்சளுக்கு குவிண்டால் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கஸ்பாபேட்டை யில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சோலார்

மஞ்சளுக்கு குவிண்டால் ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கஸ்பாபேட்டை யில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்

இந்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்.

மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மாட்டு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.75-ம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

தொடர் காத்திருப்பு போராட்டம்

அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது. ஈரோடு சோலார் அருகே உள்ள கஸ்பாபேட்டை மகா முனிஸ்வரர் கோவில் பின்புறத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈரோடு ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன், ஈரோடு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தீரன் தனசேகரன் உள்பட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, அறச்சலூர், சென்னிமலை, எழுமாத்தூர், அவல்பூந்துறை, கஸ்பாபேட்டை, நாதகவுண்டன்பாளையம், எளையாம்பாளையம், எளையம்பாளையம் புதூர், அசோகபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story