ஆதார விலை வழங்கக்ேகாரி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு


ஆதார விலை வழங்கக்ேகாரி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு
x

நீலகிரியில் பச்சை தேயிலைக்கு ஆதார விலை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் பச்சை தேயிலைக்கு ஆதார விலை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

பச்சை தேயிலை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை பறித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, மும்பை, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த வார ஏலத்தில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 16 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனை ஆனது. தேயிலைத்தூளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. ஏலம் இன்கோ சர்வ் தேயிலைத்தூள் ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குைறவால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பச்சை தேயிலை விலை குறைந்து உள்ளது.

போராட்டம் நடத்த முடிவு

பச்சை தேயிலை கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தேயிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பச்சை தேயிலை விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் தேயிலை விவசாயிகள் சங்கம் சார்பில், ஆதார விலை கோரி மாவட்ட அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.


Next Story