கம்பத்தில் உள்ள தேசிய வேளாண் சந்தையில் தொழில்நுட்ப பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு


கம்பத்தில் உள்ள தேசிய வேளாண் சந்தையில் தொழில்நுட்ப பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

கம்பத்தில் உள்ள தேசிய வேளாண் சந்தையில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை தேசிய அளவிலான சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பயன்பெறும் வகையில், கம்பத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு, இணையதள உதவியுடன் உள்ளூர் சந்தையை, இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு கொண்டு செல்லும் தேசிய வேளாண் சந்தையின் சேவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில், விவசாயிகளின் விளைப்பொருட்களை தனி அலுவலர்களால் எவ்வாறு தரம் நிர்ணயம் செய்வார்கள், தரத்திற்கேற்ப விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்தும், வியாபாரிகளிடம் பணத்திற்கு தேடி அலையாமல் விற்பனை செய்த விளைப்பொருட்களுக்கு ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் பெறுவது குறித்தும், அறுவடைக்குப்பின் செய்யவேண்டிய தொழில்நுட்பங்கள், தானியங்கள் சேமிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

இதன்மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர். இதேபோல் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Related Tags :
Next Story