நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்


நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
x
தினத்தந்தி 11 Dec 2022 7:00 PM GMT (Updated: 11 Dec 2022 7:00 PM GMT)

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சம்பா நெல் கொள்முதலில் தமிழக அரசுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கோவில், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகளை குத்தகை பாக்கி என்ற பெயரில் நில வெளியற்றம் செய்து, குத்தகைப் பதிவை ரத்து செய்து உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். குத்தகை நிலுவைத் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் உரிமை மீட்பு மாநாடு வருகிற 27-ந் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story