கோட்டூரில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் - விவசாயிகள் சங்கம்


கோட்டூரில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் - விவசாயிகள் சங்கம்
x
தினத்தந்தி 20 Dec 2022 7:00 PM GMT (Updated: 20 Dec 2022 7:00 PM GMT)

கோட்டூரில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோட்டூர் ஒன்றிய 23-வது மாநாடு திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூரில் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பரந்தாமன் ஆண்டறிக்கை படித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம், மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, மாரிமுத்து எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் சவுந்தர்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் சந்திரமோகன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கோட்டூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். திருமேனி ஏரியை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கோவில், மடம், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாடு முடிவில் ஒன்றிய தலைவராக அறிவுடை நம்பி, ஒன்றிய செயலாளராக சௌந்தரராஜன், ஒன்றிய பொருளாளராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story