காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட பணிகளை விரைவில் முடிக்க விவசாயிகள் கோரிக்கை


காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட பணிகளை விரைவில் முடிக்க விவசாயிகள் கோரிக்கை
x

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

போராட்டம்

கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- புகழூர் தனியார் சர்க்கரை ஆலை வெளியிடும் புகையினால் கரிதுகள்கள், கரும்புச்சக்கை துகள்கள் சுற்றுவட்டார மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் புகழூர் வாய்க்கால்களில் சர்க்கரைக்கழிவு நீர் கலப்பதனால், ஆடு, மாடுகள் குடித்து உயிரிழக்க நேரிடுகிறது.இதனால் பாசனவாய்க்கால்கள் மாசுபடுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பயிர் கடன் வழங்க வேண்டும்

நஞ்சை புகளூர் தடுப்பணை தரத்துடன் கட்டப்படுகிறதா என கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் தரமான விதைகள் வழங்கவும் மற்றும் பயிர் கடன் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு கடைமடை வரை காவிரி நீர் செல்ல உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story