பயிர்க்கடனை செலுத்த கூடுதல் அவகாசம் விவசாயிகள் கோரிக்கை


பயிர்க்கடனை செலுத்த கூடுதல் அவகாசம்  விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2023 12:30 AM IST (Updated: 28 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடனை செலுத்த கூடுதல் அவகாசம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி வட்டார விவசாயிகள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த நாளை(சனிக்கிழமை) கடைசி தவணை தேதியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக கடனை செலுத்துமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். கூட்டுறவு வங்கிகள் தங்களது கடன் தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் கணக்கு முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தொலைபேசி மூலம் கடனை திரும்ப செலுத்துமாறு கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே தமிழக அரசு சிவகங்கை மாவட்டத்தை வறட்சி பகுதிகளாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வேளாண் துறை இளையான்குடி அலுவலகத்தில் வறட்சி தொகை எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை விவசாயிகளுக்கு தெரிவித்து வருகின்றது.

மேலும் வறட்சியாக அறிவிக்கப்பட்டதால் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடன் பெற்ற விவசாயிகள் வறட்சி நிவாரணம் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு இழப்பு தொகை கிடைத்தால் பயிர்க்கடனை திரும்ப செலுத்த முடியும். ஆகவே விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story