எலுமிச்சை பழங்களுக்கு விலை பட்டியல் வைக்க விவசாயிகள் கோரிக்கை


எலுமிச்சை பழங்களுக்கு விலை பட்டியல் வைக்க விவசாயிகள் கோரிக்கை
x

வடகாடு சுற்றுவட்டார பகுதியில் எலுமிச்சை பழங்களுக்கு விலை பட்டியல் வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எலுமிச்சை பழங்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்களை வாங்குவதற்கு என்றே வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பழக்கடைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் எலுமிச்சை பழங்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் எலுமிச்சை பழங்கள் விலை ஒவ்வொரு கடைக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால் எந்த கடையில் விற்பனை செய்வது என தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்து வருகிறார்கள். எனவே கடை முன்பு உரிய விலை பட்டியல் வைத்து எலுமிச்சை பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story