கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்் விவசாயிகள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்் விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து வருகிற 15-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணனிடம் நேற்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், "கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு, நன்செய் பாசனத்துக்கு வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்.
மேலும், தண்ணீர் திறப்பு தேதியை முன்கூட்டியே அறிவித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் சாகுபடிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும்", என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story