ஓடையை கடக்க தரைப்பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை


ஓடையை கடக்க தரைப்பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
x

தகரகுப்பம் ஒட்டனேரியில் ஓடையை கடக்க தரைப்பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

தகரகுப்பம் ஒட்டனேரியில் ஓடையை கடக்க தரைப்பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னை மேல்பாடி அனைக்கட்டின் கிழக்கு கால்வாய் மூலம் ஆற்றுநீர் செங்கல்நத்தம், ஏரிமுன்னூர், ரெண்டாடி, பெருங்காஞ்சி சோளிங்கர், நந்தி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு ஆற்று நீர் செல்கிறது.

தகரகுப்பத்தை அடுத்த ஒட்டனேரி ஒருங்கிணைந்த சுகாதார கழிவறை அருகே சுமார் 35 அடி அகலத்தில் ஓடைஉள்ளது. இந்த ஓடைக்கு அப்பால் விளைநிலங்கள் உள்ளன.

ஓடைக்கு மறுகரையில் குடியிருப்பும் மேற்கு பகுதியில் மயானமும் உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் வசதிக்காக ஓடையில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடையில் இருந்த தார்சாலை வெள்ளைத்தில் அடித்து செல்லப்பட்டது. மழைக்காலங்களில் ஓடையில் எப்போதும் தண்ணீர் செல்வதால் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்வதிலும் சிரமம் உள்ளது.

எனவே ஓடையில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என ஏரி பாசன தலைவர் குப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

==========


Next Story