கோபி அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா


கோபி அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
x

கோபி அருகே கீழ்பவானி வாய்க்கால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே கீழ்பவானி வாய்க்கால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோபி அருகே கீழ்பவானி வாய்க்கால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தர்ணா

கோபியில் உள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் உதவி செயற்பொறியாளர் அறைக்குள் நுைழந்து அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் உதவி செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் கூறும்போது, 'கீழ்பவானி பாசன வாய்க்காலின் பிரதான கிளை வாய்க்கால் செல்லும் கூகலூர் பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.

5½ நாட்கள் தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குள்ளம்பாளையம், கூகலூர், நாதிபாளையம், ஆண்டிபாளையம், புதுக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளும் பாதிப்படைந்துள்ளன. எனவே வாய்க்காலில் ஏற்கனவே வழங்கப்பட்ட தண்ணீரையே திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அதற்கு அதிகாரி கூறும்போது, 'கூகலூர் கிளை வாய்க்காலில் வாரத்தில் 5½ நாட்கள் மட்டும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். மீதி 1½ நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படும்' என்றார். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story