விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்


விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x

வடக்கு விஜயநாராயணத்தில் விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தை மராமத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் நேற்று முன்தினம் கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை வடக்கு விஜயநாராயணம் போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரி விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமையில் போலீஸ் நிலையம் அருகேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த ேபாராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது ஷபீர்ஆலம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழக அரசு குளங்கள் மராமத்து பணிக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், நிதி ஒதுக்கும் பட்சத்தில் வடக்கு விஜயநாராயணம் குளம் மராமத்து செய்யப்படும் என்று கூறினார். அதற்கு போராட்ட குழுவினர் மராமத்து பணி செய்ய தமிழக அரசு உத்தரவாதம் எழுதிக் கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள். பின்னர் சமரசம் ஏற்படாததால் உதவி கலெக்டர் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


Next Story