அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் விழா


அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் விழா
x

திருவண்ணாமலை அருகே வேலையாம்பாக்கம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் விழா நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் உள்ள வேலையாம்பாக்கம் கிராமத்தில் மாநில விரிவாக்கம் சீரமைப்பு திட்டம் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் விழா கொண்டாடப்பட்டது.

மாநில அரசு திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

இதில் வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி வேளாண்மை அலுவலர் சோபனா எடுத்துரைத்தார்.

பட்டு வளர்ப்புத் துறை கள உதவியாளர் அம்பிகா மல்பெரி நாற்று வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, அதற்குண்டான மானியங்கள் பற்றி விளக்கமாக விளக்கி கூறினார்.

கால்நடைத்துறையின் பராமரிப்பு உதவியாளர் குமார் கலந்து கொண்டு கால்நடைத்துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பழனி கலந்து கொண்டு துறையில் உள்ள திட்டங்கள், மானிய விவரங்கள் குழு தொடங்குதல் மற்றும் நெல்களம் கட்டுதல் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

விழாவில் உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சானகொல்லி, நுண்ணூட்டக்கலவை மற்றும் நெல் விதை ரகங்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் கிராமத்திற்கு கிடைக்க பெறும் மானிய விவரங்கள் மற்றும் இடுபொருட்கள் பற்றி விளக்கமாக கூறினார்.


Related Tags :
Next Story