விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story