விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சம்பா சாகுபடிக்கு கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூனம்பட்டி முதல் பரமத்தி வரை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் சரி செய்து தர வேண்டும். மாயனூர் பகுதியில் விவசாயிகளுக்கு மாற்று சாகுபடி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

தென்னிலை பகுதியில் சரியாக இல்லாத சாலையினை சீரமைத்து தர வேண்டும். கட்டளை வாய்க்கால் பகுதியில் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். புலியூர் பகுதியில் கோழிக் கழிவுகளை வாய்க்காலில் கொட்டப்படுவதை உடனடியாக அகற்ற வேண்டும்.

தூர்வார நடவடிக்கை

பழைய ஜெயங்கொண்டம் முதல் லட்சுமணபட்டி வரை செல்லும் சாலையில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூட வேண்டும். நங்கவரம் பகுதியில் விவசாயிகள்பயன்பெறும் வகையில் விவசாய பொருட்களை வைப்பதற்காக சிறு ஒழுங்குமுறை கூடம் அமைத்து தர வேண்டும். பாலாராஜபுரம் பகுதியில் ஓடை கழிவு வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும்.

மகிழப்பட்டி பகுதியில் கரூர் முதல் மணப்பாறை வரை விவசாயிகள் சாகுபடி செய்த காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாயனூர் கதவணைக்கு இடம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடுகளை பெற்று தர வேண்டும். வளையல்காரன்புதூர் பகுதியில் உள்ள ஏரிகளை தூர்வாரி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


Next Story