விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி நடத்துகிறார். கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகள், கருத்துக்களை எடுத்து கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story