விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்


விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
x

கலவையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

திமிரி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் சந்தியா தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ஷம்சாத் முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு கலவையை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு முறையான அழைப்புகள் சென்று சேர்வதில்லை.. இதனால் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் வருகை பதிவேடு குறைவாக உள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மருத்துவத்துறை மின்துறை, வனத்துறை, கால்நடைத்துறை போன்ற துறைகளுக்கு முறையான அழைப்புகள் விடுக்காததால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் பல மாதங்களாக கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் உள்ளது.

மே மாதம் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இன்னும் உரிய தீர்வு எடுக்கப்படவில்லை. விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் பெயரளவில் மட்டுமே நடத்தப்படுகிறது.

விவசாயிகளின் குறைகளை தீர்க்கப்படுவது இல்லை. நடப்பு போகத்திற்கு உண்டான பசலை ஆண்டு மாறி இருப்பதினால் பயிர் காப்பீடு கட்ட முடியாத நிலையில் உள்ளோம். எனவே மழை காலத்தில் பயிர்களை எப்படி பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின்னர் அதிகாரிகள் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்றனர்.


Related Tags :
Next Story