விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் நடக்கிறது


விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்;        கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்கள் நேரடியாக கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story