விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
திண்டுக்கல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் அந்தந்த ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
அதன்படி திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்து தீர்வு காணலாம் என்று ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story