விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 3:58 AM IST (Updated: 28 Jun 2023 4:55 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

மதுரை


மதுரை மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு துறையின் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஜீவா, மதுரை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் அமிரதா, துணைப்பதிவாளர் மற்றும் மண்டல மேலாளர் டான்பெட் பார்த்திபன், துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் பாபு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் வெற்றிவேலன் ஆகியோர் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக கூறினர். மேலும் இந்த கூட்டத்தில் துறை அலுவலர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story