விவசாயிகள் நில ஆவணம் குறித்த முழு விவரங்களை புதிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்-கலெக்டர்


விவசாயிகள் நில ஆவணம் குறித்த முழு விவரங்களை புதிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்-கலெக்டர்
x

விவசாயிகள் தங்களது நில விவரம், சாகுபடி உள்ளிட்ட முழு தகவல்களை புதிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

விவசாயிகள் தங்களது நில விவரம், சாகுபடி உள்ளிட்ட முழு தகவல்களை புதிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதிய இணையதளம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- விவசாயிகளின் விவரங்களுக்கு http://www.agrimark.tn.gov.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் கீழ் உள்ள இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில், அனைத்து சாகுபடி நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், பயிர்சாகுபடி போன்ற அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.இதில் வருவாய்த்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, வேளாண் பொறியியல், உணவு வழங்கல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, விதைச்சான்றளிப்பு மற்றும் சர்க்கரை ஆகிய துறைகள் இணைக்கப்பட உள்ளன.

இத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பயனாளியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செல்லும்.

இத்திட்டம் ஒற்றை சாளர தளமாக செயல்படுகிறது. ஒரே இடத்தில் பதிவு செய்வதன் மூலம் விவசாயம் குறித்த அனைத்து துறைகளாலும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். ஒவ்வொரு முறையும் தனியாக ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

உறுதிப்படுத்த வேண்டும்

இதுவரை அரசிடம் இருந்து பெற்ற பயன்களை இனி மேல் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார்எண், அலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் விவசாயிகள் இணைக்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் நிலப்பட்டா ஆவண நகலுடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஆவண நகல்களை ஒப்படைத்து இணையதளத்தில் தங்களது விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை விவசாயிகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்,

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story