இல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் இன்று முதல் நடக்கிறது

x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் ஊராட்சி இன்று முதல் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உழவர் கடன் அட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 62 ஆயிரத்து 739 உழவர் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 40 ஆயிரத்து 780 விவசாயிகள் உழவர் கடன் அட்டைகள் பெறாமல் உள்ளனர். அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், உழவர் கடன் அட்டை வழங்க தேவையான மனுக்களை நேரடியாக கிராம ஊராட்சிகளில் முகாமிட்டு மனுக்கள் பெறும் வகையில் இல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளது.

பயிர்க்கடன்

உழவர் கடன் அட்டை பெறுவதன் மூலம் விவசாயிகள் விவசாய பணிக்கு தேவையான செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை எந்தவித பிணையமும் இன்றி பயிர்க்கடன் பெறலாம். மேலும் ரூ.3 லட்சம் வரை பிணையத்துடன் கூடிய பயிர்க் கடன் 7 சதவீத வட்டியில் பெறலாம். மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மத்திய அரசு 3 சதவீத வட்டி மானியமாக வழங்குகிறது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு மாநில அரசு 4 சதவீத வட்டி மானியமாக வழங்குகிறது.

பயன் பெறலாம்

விவசாய கடன் அட்டை பெற விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் பட்டா, சிட்டா, மற்றும் அடங்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை முகாமில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நிலம் மற்றும் பயிர் அளவீடு பொறுத்து கடன் வழங்கப்படும்.

இச்சிறப்பு முகாம் கிராம ஊராட்சிகளில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய வங்கிகள் ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உழவர் கடன் அட்டை பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story