தேங்காயை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்


தேங்காயை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

தேங்காயை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொப்பரை தேங்காயை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கப்பள்ளி கிளைச் செயலாளர் முருகசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சரவணன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கேசவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். திருப்பூர் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் உரித்த தேங்காய்களை கிலோ ரூ.60-க்கும், கொப்பரைகளை கிலோ ரூ.160-க்கும் விலை நிர்ணயம் செய்து அரசுகளை கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். முடிவில் திருமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.



Next Story