நெமிலியில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம்
நெமிலியில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
ராணிப்பேட்டை
நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் தாசில்தார் சுமதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் வேளாண்மை, வருவாய், மின்சாரம், வனம், நீர்வள ஆதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
நெமிலி தாலுகாவில் உள்ள அனைத்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வுகாண வழிவகை செய்யப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story