தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
x

பேராவூரணியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பேராவூரணி;

பேராவூரணியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. நகர பொறுப்பாளர் சித்திரவேலு வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் பேசினார்.கூட்டத்தில், பேராவூரணி பகுதியில் குடிமனைப்பட்டா கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். பேராவூரணி ெரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து விரைவு ெரயில்களும் பேராவூரணியில் 1 நிமிடம் நின்று செல்ல வேண்டும். புறம்போக்கில் குடியிருக்கும் ஏழை மக்கள் வாழும் வீடுகளை மாற்று இடம் கொடுக்காமல் அப்புறப்படுத்த கூடாது. 100 நாள் வேலைக்கு ரூ.600 சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும்.ஏழை விவசாயிகள் வீடு கட்ட ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story