விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
திருவாரூரில் விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
திருவாரூர்;
திருவாரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் கோரிக்கைகள் குறித்து பேசினார். கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநிலக் குழு உறுப்பினர் ஞானமோகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆசாத், சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மத்திய அரசின் மக்கள் விேராத கொள்கைகளை கண்டித்து வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்கம் முழுமையாக ஆதரவு ெதரிவித்து பங்கேற்பது. நீர் நிலை, கோவில் மனைகளில் குடியிருப்பவருக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நகர, ஒன்றியங்களில் போராட்டம் நடத்துவது, திருத்துறைப்பூண்டி-தண்டலைச்சேரி அரசு கலை கல்லூரிக்கு பி.சீனிவாசராவ் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.