விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
x

திருவோணம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

தஞ்சை மாவட்டம் திருவோணம் வேளாண்மை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார ஆலோசனைக் குழு தலைவரும், திருவோணம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சோம. கண்ணப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுதா மற்றும் அலுவலர்கள் பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா எவ்வாறு செயல்படுத்துவது என விளக்கம் அளித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.


Next Story