தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாநாடு


தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாநாடு
x

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாநாடு நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநாடு விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நகர செயலாளர் வாசுதேவன், ஆண்டு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகரத்தில் குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா உடனே வழங்க வேண்டும். நகரில் கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். திருவாரூர் சாலையிலிருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணியை உடனே தொடங்க வேண்டும். 100 நாள் வேலையை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story