விவசாயிகள் நூதன போராட்டம்


விவசாயிகள் நூதன போராட்டம்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உழவர் பேரவை விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் பொம்மையை வைத்து பில்லி, சூனியம் செய்வது, குரளி வித்தை காண்பித்து நூதனமான முறையில் போராட்டம் செய்தனர்.

பின்னர் விவசாயிகள் கூறுகையில், தமிழகத்தில் 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு கடந்த 12-ந்தேதி முதல் 60 நாட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்ய அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் கலப்பட உரங்கள் மற்றும் பயோ உரங்கள் தயாரிப்பதை தடை செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் உரக்கடை மொத்த வியாபாரிகளுடன் நட்புறவு கொண்டு சில்லறை உர வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மீது பயோ உரத்தை திணித்தது போல தற்போது தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தாத நிலையை கண்டிக்கிறோம் என்றனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story