விவசாயிகள் நூதன போராட்டம்


விவசாயிகள் நூதன போராட்டம்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பூமி வெப்பமடைவதை கட்டுப்படுத்த கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கையில் குடை பிடித்த படியும், தரையில் மாட்டு சாணத்தை தெளித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பூமி வெப்ப மடைவதை கட்டுப்படுத்த மாட்டுச் சாணம் தெளிப்பது அவசியம் ஆகிறது. அதனால் கிராமம் தோறும் சாணம் தெளிப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். இந்த பணிக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் விவசாயிகள் நாத்தாம்பூண்டி சிவா, ரமேஷ் பாண்டித்துரை, ஏழுமலை, சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story