பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை தடுக்கக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு


பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை தடுக்கக்கோரி  விவசாயிகள் கலெக்டரிடம் மனு
x

பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை தடுக்கக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி

விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் கால்நடைகளை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்.வளவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா கேசவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.வளவனூர், ரெத்தினங்குடி, நரிமேடு, மாணிக்கபுரம், தம்புரான்படுகை, கள்ளுக்குடி, மயிலம்பாடி, நெற்குற்பை, முத்துராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த கிராமங்களில் விவசாயம் செய்யப்படும்போது மருதூர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பகல், இரவு என்று பார்க்காமல் எல்லா நேரமும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்து சீரழித்து விடுகின்றன. இதனால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கால்நடைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து குழந்தைகளையும் தாக்குகின்றன. எனவே விவசாயத்திற்கு இடையூறாக வலம்வரும் இந்த கால்நடைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும்மாறும், சம்பா சாகுபடியை தொடரவும் வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story