விவசாயிகள் ஊர்வலம்- மாநாடு
விவசாயிகள் ஊர்வலம்- மாநாடு
தஞ்சாவூர்
ஒரத்தநாடு
திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் 2-வது வட்டார மாநாடு ஊரணிபுரத்தில் சங்கத்தின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் வி.கே.சின்னத்துரை வரவேற்றார். சங்க பொருளாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை செயற்பொறியாளர் முருகேசன் கலந்துகொண்டு மாநாட்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், வக்கீல் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வங்கியில் கடன் உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story