விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 10:15 PM GMT (Updated: 10 Oct 2023 10:15 PM GMT)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி, பொருளாளர் தயாளன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும் காட்டு யானை, பன்றிகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் வனவிலங்குகள் தாக்கியதில் காயமடையும் விவசாயிகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். வனவிலங்குகள், பறவைகளை விரட்டும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது.

மேலும் கேரள அரசை போன்று பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கைகளை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.


Next Story