பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x

மெலட்டூர் அருகே பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:-

மெலட்டூர் அருகே பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாசன வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள இடையிருப்பு, மணப்படுகை, நெடுஞ்சேரி ஆகிய கிராமங்களின் முக்கிய பாசன வாய்க்காலாக பாப்பா வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு உள்பட பல கிராமங்களில் உள்ள 700 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் ரெங்கநாதபுரம் பகுதியில் பாப்பா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

சாலை மறியல் போராட்டம் காரணமாக பாபநாசம்-சாலியமங்கலம் இடையே ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story