விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

விவசாயத்திற்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி காளி மின்வாரிய அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு

மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சியில் வேளாண்மை விரிவாக்க மையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 11 ஊராட்சிகளை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்

இந்த கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து, அதனை அதே ஊராட்சியில் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யாமல் அருகில் உள்ள திருமங்கலம் ஊராட்சிக்கு மாற்ற வேளாண்மைத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனை கண்டித்தும், விவசாயத்துக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் காளி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வேளாண் அலுவலர் வசந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க தனக்கு சொந்தமான இடத்தை தருவதாக ஊராட்சித் தலைவர் தேவியின் கணவர் உமாபதி உறுதியளித்தார். அதன்பேரில், சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில், விவசாய பணிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி காளி மின்வாரிய அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.





Next Story