விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது

சிவகங்கை

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது காவிரி மேலாண்மை வாரியம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதை கண்டித்தும் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் ராம முருகன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முகவை மலைச்சாமி மற்றும் கருணாநிதி, ராஜீவ் காந்தி, மாயாண்டி சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story