கையில் மக்காச்சோள பயிர்களை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இழப்பீடு வழங்காததை கண்டித்து கையில் மக்காச்சோள பயிர்களை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்;
மக்காச்சோளத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டை காலதாமதமாக வழங்கினால் அதனை வட்டியுடன் வழங்க வேண்டும் என சட்ட விதிகள் இருந்த போதும் அதனை பின்பற்றாதவர்களை கண்டித்தும் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு டாக்டர் ஆனந்தி தலைமை தாங்கினார். புவனேஸ்வரி சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற விவசாயிகள் கையில் மக்காச்சோள பயிர்களை ஏந்தியவாறு இழப்பீடு வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் வரதராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கும்பகோணம் கோட்டாட்சியர் லதாவிடம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.