விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

குடிமனைப்பட்டா வழங்கக்கோாி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி;

குடிமனைப்பட்டா வழங்கக்கோாி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆா்ப்பாட்டம்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். இப்பணிகளுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருள் தரமாகவும், எடை குறையாமலும் வழங்க வேண்டும். கொரடாச்சேரி ஒன்றியத்தில் அரசவனங்காடு, குளிக்கரை, கண்கொடுத்தவனிதம், அத்திக்கடை அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளை நோயாளிகளை அலைக்கழிக்காமல் பாதுகாப்பாக வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள கிராம சாலைகளை பழுது நீக்க வேண்டும். கோவில் இடங்களில் குடியிருப்போர் அனைவருக்கும் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முகுந்தனூர் கடை தெரு

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர், நிர்வாகிகள் சிவசாமி, கண்ணுசாமி, ரெங்கசாமி, சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகுந்தனூர் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அமிர்தலிங்கம், ஒன்றிய செயலாளர் ஜெயபால் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைப்போல அம்மையப்பன் கடை தெரு, அரசவணங்காடு கடை தெரு, முசிறியம், திருக்கண்ணமங்கை கடைத்தெரு, வடகண்டம் கடைத்தெரு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story