விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தரமற்ற நிலக்கடலை விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், நவ.26-

தரமற்ற நிலக்கடலை விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இதற்கான விதைகள் தரமாக வழங்கப்படவில்லை. போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வண்மையாக கண்டிக்கிறோம்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தரமற்ற நிலக்கடலை விதைகளை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலையை கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். சேமிப்பு கிடங்குகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர்.


Next Story