விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வலங்கைமானில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

வலங்கைமான்;

வலங்ைகமானில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழுவை சேர்ந்த கலியபெருமாள், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊராட்சிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,இடிந்து விழும் சூழலில் உள்ள அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், ஈமகிரியை உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகியவற்றை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

1 More update

Next Story