தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டம்


தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டம்
x

தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடியில் செயல்பட்ட திருஆரூரான் சர்க்கரை ஆலை 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த ஆலை மூலமாக வர வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 42-வது நாளாக போராட்டம் நடந்தது. இதற்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாக.முருகேசன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு தரையில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story