விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டப் பொருளாளர் பழனிஅய்யா, மாவட்ட துணைத்தலைவர் ஞானமாணிக்கம், திருவையாறு ஒன்றிய செயலாளர் ராம், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் கருப்பையன், நிர்வாகிகள் ராஜா, வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை, கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, ரூ.112 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக பெற்ற வங்கிக் கடன் பிரச்சினையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story