விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பு ஏல அறிவிப்பை கண்டித்தும், விவசாயிகளின் டெல்லி பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.இதில், மத்திய பா.ஜ.க.அரசு வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க ஒத்துக் கொண்டு வழங்காதது, தொழிலாளர் நல 44 சட்டங்களை 4 தொகுப்புகளாகச் சுருக்கி தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களைப் பறிப்பது, கிராமப்புற நூறு நாள் வேலை திட்ட நிதிக் குறைப்பு, காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி எடுப்பு ஏல அறிவிப்பு ஆகியவற்றை கண்டித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுத்து பாலைவனமாக்க வேண்டாம். நிலக்கரி எடுப்பு ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



Next Story