ரோட்டில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்


ரோட்டில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 1:00 AM IST (Updated: 2 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விலை வீழ்ச்சியை தடுக்க கோரி ரோட்டில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

சூலூர்


தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும். கொப்பரை தேங் காய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் முத்துக்கவுண்டன்புதூர் பிரிவில் தேங்காய் உடைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர் முனை இளைஞர் அணி சார்பில் மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் டாக்டர் தங்கராஜ், மாநில செயலாளர் சந்திரசேகர் மற்றும் மணி, கணேசன், மாணிக்கராஜ், நிஷாந்த் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய்களை ரோட்டில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கட்சி சார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் கூறுகையில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்துவோம் என்றார்.


Next Story