தேங்காய்களுடன் வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தேங்காய்களுடன் வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தேங்காய்களுடன் வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தேங்காய்களுடன் வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பி.ஏ.பி. பாசன திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக்கூடாது, பி.ஏ.பி. பாசன தண்ணீரை தவறாக பயன்படுத் தும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பரம்பிக்குளம் அணையில் உடைந்த ஷட்டரை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

.இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். சூலூர் தொகுதி வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் கு.செல்லமுத்து கலந்து கொண்டு பேசினார்.

தேங்காய் மாலை

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய், கொப்பரை தேங்காய்களை மாலையாக அணிந்து வந்திருந்தனர்.

முன்னதாக கு.செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.ஏ.பி. பாசன திட்டத்துக்கு ஏராளமான விவசாயிகள் நிலம் கொடுத்து உள்ளனர்.

அதன்படி வாய்க்காலின் இருபுறமும் ஒரே விவசாயியின் நிலம் இருக்கும்போது, அந்த நிலத்துக்கு ஒரு இடத் தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாய்க்காலை கடந்து கிணற் றில் இருந்து எடுத்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம்.

மின் இணைப்பு துண்டிப்பு

அதுபோன்று கொண்டு சென்றால் தண்ணீரை திருடுவதாக கூறி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கிணற்றுப்பாசன மின் இணைப் பை அதிகாரிகள் துண்டித்து வருகிறார்கள்.

இதுவரை ஏராளமான விவசாயிகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பல விவசாயிகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனைமலை-நல்லாறு திட்டம்

சு.பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, விவசாயிகள் யாரும் வாய்க்காலில் இருந்து தண்ணீரை திருடி விற்பனை செய்வது கிடையாது. தற்போது பி.ஏ.பி. பாசனத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.

எனவே ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி னால் தட்டுப்பாடு இருக்காது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரம்பிக்குளம் அணையில் உடைந்த ஷட்டரை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்றார்.


Next Story