நெற்றியில் நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


நெற்றியில் நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

நெற்றியில் நாமம் போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நெற்றியில் நாமமிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நெற்றியில் நாமமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத்தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அரவிந்தசாமி, துரைராஜ், பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரவேண்டும், உரங்களின் விலையை குறைத்து, தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வேண்டும்.

திரும்ப பெற வேண்டும்

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் மின்திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலதாமதம் இல்லாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கண்டமங்கலம் பிள்ளை வாய்க்காலைச் சீரமைக்க வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் காமாட்சிபுரம் பவுன்ராஜ், மனையேறிப்பட்டி குணசேகரன், கணேசன், வடுவச்சியம்மன், ராயராம்பட்டி அறிவழகன், பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.


Next Story