மொட்டையடித்து விவசாயிகள் போராட்டம்


மொட்டையடித்து விவசாயிகள் போராட்டம்
x

மொட்டையடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற பா.ஜனதாவின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நெல், கரும்பு ஆகியவற்றின் ஆதார விலை உயர்த்தி தரப்படும் என்ற மாநில அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு, உரிய காலத்தில் உரிய அளவு காவிரி நீரை திறந்து விட வேண்டும். மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

26-வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 3 பேர் பாதியளவு மொட்டை அடித்துக் கொண்டும், 2 பேர் தலையில் முழுவதுமாக மொட்டையடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒரு பக்க மீசையை பாதி அகற்றி இருந்தனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story