குறைதீர்வு கூட்டத்தில் வெளிநடப்பு செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குறைதீர்வு கூட்டத்தில் வெளிநடப்பு செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் அலுவலக நுழைவுவாயில் முன் நின்று கருப்பு துண்டு அணிந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நார்த்தாம்பூண்டி சிவகுமார் தலைமை தாங்கினார். வழக்கமாக மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும், நிர்வாக காரணம் என்று சொல்லி விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை மட்டும் ஒத்திவைக்கின்றனர் என்றும், தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் சரிவர வருவதில்லை என்றும், வருவாய் துறை சார்பில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சில விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story