கருகும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


கருகும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

திருவாரூர் மாவட்டத்தில் கருகும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டத்தில் கருகும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

போதிய அளவு தண்ணீர் இன்றி காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி ஆணையம் கருகும் பயிரை காப்பாற்ற காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி உரிய நீரை பெற்றுத்தர வேண்டும். கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்க வேண்டும்தமிழக அரசு கருகிய குறுவை பயிருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடம் மனுவை பெறுவதில் உள்ள குளறுபடிகளை கைவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி உரிய நீரை பெற்று குறுவை பயிரை காப்பாற்ற கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் உப்பூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் வீரமணி ,விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கொரடாச்சேரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொரடாச்சேரி விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கோபிராஜ், ஒன்றியத் தலைவர் நந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

வலங்கைமான் கடைத்தெரு பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் இளங்கோவன் மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வி.பூசாந்திரம் தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாயிகள் சங்க ஒன்றியத்தலைவர் பி.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பி.காளியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story